Monday, January 11, 2010

திருநாவுக்கரசர்....


திருநாவுக்கரசர்....

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியில் கூப்பிட்டால் கடல் அருகில் வரும் ஆவுடையார்கோயில் ஓன்றியத்தில் ஒரு மூலையில் உள்ள கிராமம்.பஞ்சாயத்து துவக்கப் பள்ளியில் பொடுசுகளோடு பொடுசகளாக வகுப்பில் இருக்கும் மாணவர்களில் அவன் மட்டும் தனித்துத் தெரிகின்றான். கிராமத்து மாணவர்களுக்கே உரிய இலட்சணக் குறைவு அவனுக்கு மட்டும் மிஸ்சிங்.

சற்றே எடுப்பான நிறத்தினால் மட்டுமல்ல, சராசரிக்கும் அதிகமான அறிவினால் ஆசிரியர்களின் அன்புக்கும் பாத்திரமாகின்றான். மூனாம்ப்பில் இருந்து நாலாம்ப்பிற்கு பாஸாசன அவனது மகிழ்ச்சி சற்று நேரம்கூட நீடிக்கவில்லை.படிப்பின் மதிப்பும்,உயர்வும் புரியாத அவனது கிராமத்து வெள்ளந்தித் தந்தை “படிச்சது போதும்.இனிமே நீ ஒழுங்கா நம்ம ஆடு,மாட்டை மேக்கிற வழியப்பாரு” என்கின்றார். தினமும் அவன் மாடு மேய்க்கச் செல்லும்போது 10 பைசா காசும் குடுக்கின்றார்.
அவன்தான் சராசரிக்கும் சற்று அதிகமான அறிவுள்ள மாணவனாச்சே! ஒரு யோசனை வருகின்றது. தன்னோடு மாடு மேய்க்க வரும் சக தோழனிடம் ஒரு டீலுக்கு வருகின்றான். அதாவது தன்னுடைய மாடுகளையும் சேர்த்து அந்தத் தோழன் மேய்க்க வேண்டியது. அதற்குக் கூலியாக இவன் தினமும் அப்பா தரும் 10 பைசாவை அவனிடம் குடுத்துவிட வேண்டியது. தோழன் டீல் ஓ.கே என்று சொல்ல இவன் சந்தோசமாக மாடுகளை அவனிடம் விட்டுவிட்டு அப்பாவிற்குத் தெரியாமல் பள்ளிக்குச் செல்லத் துவங்கினான்.

நல்லவேளை...அன்றெல்லாம் கிராமங்களில் பணம் பறிக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இல்லாததால் அப்பாவுக்குத் தெரியாமல் பைசா செலவின்றி பத்தாம் வகுப்புவரை அந்த கிராமத்துப் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்களோடு தேறுகின்றான். அங்குதான் ஆரமிக்கின்றது அவனது வாழ்க்கையில் முதல் சோதனை.காரணம் மேலே பி.யூ.சி.படிக்க வேண்டும் என்றால் அருகில் உள்ள நகரமான புதுக்கோட்டைக்குச் செல்ல வேண்டும். தாய்மாமனிடன் சரண்டர் ஆகின்றான் அந்த மாணவன். அவர் அவனது அப்பாவிடம் விஷயத்தைச் சொல்ல அப்பாவும் மகிழ்வோடு அவன் மேலும் படிக்க அனுமதிக்கின்றார்.

புதுக்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்து சென்னையில் சட்டக் கல்லூரியில் பி.எல்., படிப்பில் சேர்ந்து அவன் வாழ்க்கை ஒரு கெளரவமான இடத்திற்கு வருகின்ற நேரம். இந்நிலையில் எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவைத் துவங்குகின்றார். சட்டக் கல்லூரி மாணவர் அ.தி.மு.க அமைப்பைத் துவங்கி அரசியலிலும் ஆர்வமாகின்றான் அந்த கிராமத்து மாணவன். விரைவில் வந்த தேர்தலில் அவன் கிராமம் இருக்கும் தொகுதிக்கு அவனை வேட்பாளராக அறிவிக்கின்றார் எம்.ஜி.ஆர்.

அந்த கிராமத்துச் சிறுவன் வேறு யாருமல்ல...எம்.ஜி.ஆர் அவர்களால் தனது ”இளைய நிலா” என்று அன்போடு அழைக்கப்பட்ட அன்றைய திருநாவுக்கரசு...இன்றைய திருநாவுக்கரசர்..

நல்லதொரு மனிதர். காலம் வெல்ல முடியாவிட்டாலும்..இத்தனை ஆண்டுகாலம் அரசியலில் இருந்து சாதித்தவர் இபொழுது தான் தெளிவனமுடிவை எடுத்துள்ளார்.

அன்புடன்...
மணிமாறன்.கா

No comments:

Post a Comment