Monday, January 11, 2010

நமச்சிவாய வாழ்க....



நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55


விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60


தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65


பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து

நான் செய்தி தாளில் படித்த ஒன்று இன்னும் ஒரு "திருப்பெருந்துறை' "தில்லை திருப்பெருந்துறை'



நமது ஊரை போலவே மனிக்கவசகறல் கட்டப்பட்டது தான் இந்த "தில்லை திருப்பெருந்துறை'

சிவனடியார்களால் பெரிதும் போற்றப்படுவது திருவாசகம். "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்னும் சொல் வழக்கே இதற்குச் சான்று. இதை இயற்றிய மாணிக்கவாசகப் பெருமான், சிதம்பரத்திலுள்ள தில்லை திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி கோயிலில் குரு அம்சமாகக் காட்சியளிக்கிறார். மாணிக்கவாசகரே கட்டிய கோயில் இது.

தல வரலாறு: மதுரையில் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர், திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவிலில் (புதுக்கோட்டை மாவட்டம்) சிவனிடம் உபதேசம் பெற்றார். இவருக்காக சிவபெருமான் மதுரையில் நரிகளை பரிகளாக்கியும், வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தும் திருவிளையாடல் நிகழ்த்தினார். இவர் ஒருமுறை சிதம்பரம் வந்தார். முனிவர்கள் தங்கியிருந்த ஒரு பர்ணசாலையில் தங்கினார். ஆனாலும், திருப்பெருந்துறை ஆத்மநாதரை அவரால் மறக்க முடியவில்லை. எனவே, இங்கும் ஆத்மநாதருக்கு அளவில் சிறிய கோயில் கட்டினார். சுவாமிக்கு ஆத்மநாதர் என்றும், அம்பிகைக்கு யோகாம்பாள் என்றும் பெயர் சூட்டினார். இத்தலம்"தில்லை திருப்பெருந்துறை' என்றழைக்கப்பட்டது.


அடியாராக வந்த சிவன்: மாணிக்கவாசகர் இங்கு தங்கியிருந்தபோது, சிவன் அடியார் வேடத்தில் வந்து, அவரது பாடல்களைக் கேட்க விரும்புவதாக கூறினார். மாணிக்கவாசகரும் பாடினார். சிவன் அந்தப் பாடல்களைத் தொகுத்து "இப்பாடல்கள் மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளியவண்ணம் எழுதப்பட்டது' என எழுதி "திருச்சிற்றம்பலம் உடையார்' என கையெழுத்திட்டார். மறுநாள் அதை சிதம்பரம் நடராஜர் சன்னதியில் வைத்துவிட்டு மறைந்தார். வேத பண்டிதர்கள் மாணிக்கவாசகரிடம் திருவாசகத்திற்கு விளக்கம் கேட்டனர். அப்போது சிவனே ஒரு அடியாராக வந்தார். பண்டிதர்களிடம் சிவனைக்காட்டிய மாணிக்கவாசகர், "இவரே இதற்கான பொருள்' என்று சொல்லி அவருடன் இரண்டறக் கலந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் ஆத்மநாதர் சன்னதி முகப்பில் சிவன், அடியார் வடிவில் காட்சியளிக்கிறார். அருகில் மாணிக்கவாசகர் அவரை நோக்கி கை காட்டியபடி இருக்கிறார்.

குரு வடிவம்: இக்கோயில் திருப்பெருந்துறையை பல வகையிலும் ஒத்திருக்கிறது. மூலஸ்தானத்தில் சிவலிங்கம் தெற்கு நோக்கி உள்ளது. இந்த லிங்கம் முழுமையானதாக இல்லை. அம்பாள் சன்னதியில் பாதம் மட்டும் இருக்கிறது. சிவனுக்கு புழுங்கல் அரிசி சாத ஆவி, பாகற்காய் நிவேதனம் செய்கின்றனர். மாணிக்கவாசகர் சின்முத்திரை காட்டி குரு அம்சத்துடன் காட்சியளிக்கிறார். அநேகமாக எல்லா தலங்களிலும் நின்ற நிலையில் இருக்கும் மாணிக்கவாசகர், இங்கே உட்கார்ந்திருக்கிறார். மாணிக்கவாசகர் குருபூஜையன்று ஆத்மநாத சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று மதியம் மாணிக்கவாசகர், ஆத்மநாதர் சன்னதிக்குள் எழுந்தருளி சிவனுடன் இரண்டறக்கலக்கும் வைபவம் நடக்கும்.


நால்வர் சிறப்பு: நடராஜரின் நடனத்தை தரிசிக்க வந்த வியாக்ரபாதர் சிதம்பரத்தில் தங்கியிருந்தார். அவரது குழந்தை உபமன்யு பசியால் பால் வேண்டி அழுதான். சிவன் அவனுக்காக பாற்கடலை இங்கு பொங்கச்செய்து அருளினார். பாற்கடல் தீர்த்தம் எனப்படும் இத்தீர்த்தத்தின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் முன்மண்டபத்தில் யோக தட்சிணாமூர்த்தி, இருகால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் மூவரும் லிங்கத்தின் பாண வடிவில் காட்சி தருவது சிறப்பான அமைப்பு. யோக விநாயகர், அகோர வீரபத்திரர், பைரவர் ஆகியோரும் உள்ளனர். இக்கோயில் அருகில் தில்லைக்காளி மற்றும் குருநமச்சிவாயர் கோயில்கள் உள்ளன.

இருப்பிடம்: சிதம்பரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., தூரத்தில், நடராஜர் கோயிலுக்கு வட திசையில் இக்கோயில் உள்ளது. இப்பகுதியை திருப்பாற்கடல் என்று சொன்னால்தான் தெரியும்.


திறக்கும் நேரம்: காலை 8 - இரவு 8 மணி.

திருநாவுக்கரசர்....


திருநாவுக்கரசர்....

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியில் கூப்பிட்டால் கடல் அருகில் வரும் ஆவுடையார்கோயில் ஓன்றியத்தில் ஒரு மூலையில் உள்ள கிராமம்.பஞ்சாயத்து துவக்கப் பள்ளியில் பொடுசுகளோடு பொடுசகளாக வகுப்பில் இருக்கும் மாணவர்களில் அவன் மட்டும் தனித்துத் தெரிகின்றான். கிராமத்து மாணவர்களுக்கே உரிய இலட்சணக் குறைவு அவனுக்கு மட்டும் மிஸ்சிங்.

சற்றே எடுப்பான நிறத்தினால் மட்டுமல்ல, சராசரிக்கும் அதிகமான அறிவினால் ஆசிரியர்களின் அன்புக்கும் பாத்திரமாகின்றான். மூனாம்ப்பில் இருந்து நாலாம்ப்பிற்கு பாஸாசன அவனது மகிழ்ச்சி சற்று நேரம்கூட நீடிக்கவில்லை.படிப்பின் மதிப்பும்,உயர்வும் புரியாத அவனது கிராமத்து வெள்ளந்தித் தந்தை “படிச்சது போதும்.இனிமே நீ ஒழுங்கா நம்ம ஆடு,மாட்டை மேக்கிற வழியப்பாரு” என்கின்றார். தினமும் அவன் மாடு மேய்க்கச் செல்லும்போது 10 பைசா காசும் குடுக்கின்றார்.
அவன்தான் சராசரிக்கும் சற்று அதிகமான அறிவுள்ள மாணவனாச்சே! ஒரு யோசனை வருகின்றது. தன்னோடு மாடு மேய்க்க வரும் சக தோழனிடம் ஒரு டீலுக்கு வருகின்றான். அதாவது தன்னுடைய மாடுகளையும் சேர்த்து அந்தத் தோழன் மேய்க்க வேண்டியது. அதற்குக் கூலியாக இவன் தினமும் அப்பா தரும் 10 பைசாவை அவனிடம் குடுத்துவிட வேண்டியது. தோழன் டீல் ஓ.கே என்று சொல்ல இவன் சந்தோசமாக மாடுகளை அவனிடம் விட்டுவிட்டு அப்பாவிற்குத் தெரியாமல் பள்ளிக்குச் செல்லத் துவங்கினான்.

நல்லவேளை...அன்றெல்லாம் கிராமங்களில் பணம் பறிக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இல்லாததால் அப்பாவுக்குத் தெரியாமல் பைசா செலவின்றி பத்தாம் வகுப்புவரை அந்த கிராமத்துப் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்களோடு தேறுகின்றான். அங்குதான் ஆரமிக்கின்றது அவனது வாழ்க்கையில் முதல் சோதனை.காரணம் மேலே பி.யூ.சி.படிக்க வேண்டும் என்றால் அருகில் உள்ள நகரமான புதுக்கோட்டைக்குச் செல்ல வேண்டும். தாய்மாமனிடன் சரண்டர் ஆகின்றான் அந்த மாணவன். அவர் அவனது அப்பாவிடம் விஷயத்தைச் சொல்ல அப்பாவும் மகிழ்வோடு அவன் மேலும் படிக்க அனுமதிக்கின்றார்.

புதுக்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்து சென்னையில் சட்டக் கல்லூரியில் பி.எல்., படிப்பில் சேர்ந்து அவன் வாழ்க்கை ஒரு கெளரவமான இடத்திற்கு வருகின்ற நேரம். இந்நிலையில் எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவைத் துவங்குகின்றார். சட்டக் கல்லூரி மாணவர் அ.தி.மு.க அமைப்பைத் துவங்கி அரசியலிலும் ஆர்வமாகின்றான் அந்த கிராமத்து மாணவன். விரைவில் வந்த தேர்தலில் அவன் கிராமம் இருக்கும் தொகுதிக்கு அவனை வேட்பாளராக அறிவிக்கின்றார் எம்.ஜி.ஆர்.

அந்த கிராமத்துச் சிறுவன் வேறு யாருமல்ல...எம்.ஜி.ஆர் அவர்களால் தனது ”இளைய நிலா” என்று அன்போடு அழைக்கப்பட்ட அன்றைய திருநாவுக்கரசு...இன்றைய திருநாவுக்கரசர்..

நல்லதொரு மனிதர். காலம் வெல்ல முடியாவிட்டாலும்..இத்தனை ஆண்டுகாலம் அரசியலில் இருந்து சாதித்தவர் இபொழுது தான் தெளிவனமுடிவை எடுத்துள்ளார்.

அன்புடன்...
மணிமாறன்.கா